பியாங்யாங்,
வடகொரியாவில் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டு அரசாங்கம் குழந்தைகளை "நாட்டின் ராஜாக்கள்" என்று போற்றுகிறது. மேலும், ஜுன் 6 அன்று 'கொரிய குழந்தைகள் சங்கத்தின்' நிறுவன நாளும் கொண்டாடப்படுவதால், ஜூன் மாதம் முழுவதும் குழந்தைகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உள்ள மைதானத்தில் சர்வதேச குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், குழந்தைகள் ஒற்றை காலை மடக்கி துள்ளுவது, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் நடைபெற்றன. இந்த விழா முழுக்க முழுக்க குழந்தைகளின் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை கண்ட பெற்றோர்கள், தங்களுக்கு தங்களுடைய குழந்தை பருவம் நினைவுக்கு வருவதாக உணர்ச்சிபூர்வமாக கூறினர். மேலும், இந்த சிறுவர்கள் மீது அரசு காட்டும் அக்கறைக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பியாங்யாங்கில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, அவர்களின் முன்னிலையில் வடகொரிய குழந்தைகள் தங்களின் அசாத்தியமான இசை, நடனம், கலை மற்றும் விளையாட்டு திறமைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டுவார்கள்