உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்வு

உக்ரைன் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இந்த போர் உலக அளவில் பொருளாதாரத்தில் பெருத்த தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடங்கிய முதல் நாளிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது.

போருக்கு முன்புவரை 94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் ஒரே நாளில் 100 டாலரை கடந்ததுடன் தொடர்ந்து அதிகரித்தும் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த விலை மேலும் அதிகரித்து 110 டாலரை எட்டி விட்டது. இது உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை