கீவ்,
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவி உள்ளது. அவற்றை பயன்படுத்தி, உலக நாடுகளில் கண்ணாடி இழை இல்லாமல் அகண்ட அலைவரிசை இணையவசதியை அளித்து வருகிறது.
இதற்கிடையே போர் நடந்து வரும் உக்ரைனில் இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியுடன் முனையங்கள் அமைத்து தருமாறு அதன் நிறுவனர் எலான் மஸ்குக்கு உக்ரைன் துணை பிரதமர் மைகைலோ பெடரோவ் வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்று உக்ரைனில் ஸ்டார்லிங்க் மூலம் இணையவசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இனிமேல், முனையங்களும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.