உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க நேட்டன்யாஹூவுக்கு அழைப்பு

இஸ்ரேலில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தினத்தந்தி

ஜெருசலேம்,

எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி வைத்து ஐக்கிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்தார்.

ஆனால் புளூ அன்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்ஸ் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. புதிய அரசை அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ருவென் ரிவ்லின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் புதிய அரசு அமைக்க வரும்படி பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அதிபர் ருவென் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். அதனை நேட்டன்யாஹூ ஏற்றுக்கொண்டார்.

அந்நாட்டின் சட்டத்தின்படி, 28 நாட்களில் நேட்டன்யாஹூ மந்திரிசபையை அமைக்க வேண்டும். அதில் தோல்வியடையும் பட்சத்தில், கால அவகாசத்தை 2 வாரங்களுக்கு நீட்டிக்க அவர் அதிபரிடம் கோரிக்கை விடுக்கலாம். அப்போதும் நேட்டன்யாஹூ மந்திரிசபையை அமைக்க முடியவில்லையெனில், புதிய அரசை அமைக்க வரும்படி வேறொரு கட்சிக்கு அதிபர் அழைப்பு விடுப்பார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்