தெஹ்ரான்,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்தன. ஈரான் உச்ச தலைவர் காமேனி தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். உலகின் தீய மனிதர் கொல்லப்பட்டதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். ஆனாலும் ஈரான் இதனை உறுதிப்படுத்தாமல் இருந்தது. இந்த சூழலில் காமேனி கொல்லப்பட்டதை ஈரானும் உறுதி செய்துள்ளது. ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. அதோபோல ஒருவாரத்திற்கு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.