Image Courtesy : AFP 
உலக செய்திகள்

யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்த ஈரான்

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

தெஹ்ரான்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை போடோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு