தெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுடன் நீண்டகால போருக்கு தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நீண்டகால போருக்கு தயாராக உள்ளோம். அடுத்தகட்ட தாக்குதல் எதிரிகளுக்கு மிகுந்த வலிமிகுந்ததாக இருக்கும். ஈரானின் புதிய தொழில்நுட்பத்துடன் புதிய ஆயுதங்கள் விரைவில் வருகின்றன. இந்த தொழில்நுட்பம், புதிய ஆயுதத்தை இதுவரை எந்த மோதலிலும் பயன்படுத்தவில்லை. இனி அந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த உள்ளோம்’ என்றார்.