உலக செய்திகள்

ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்

ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்காவில் ஊபர் கால்டாக்சியில் பயணம் செய்த பெண் பயணிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக 2017, 2018 ஆண்டுகளில் 6 ஆயிரம் புகார்கள் வந்துள்ளனவாம். இதை ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்களில் பாதிப்பேர் டிரைவர்கள் ஆவர்.

* மெக்சிகோ நாட்டில் சீகுவாகுவா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு, முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

* ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* வட கொரியாவில் இருந்து தென்கொரியாவுக்குள் சென்ற ஒரு பெண்ணை, அந்த நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் 2 பேர் தங்கள் காவலில் வைத்து 2 முறை கருச்சிதைவு செய்யக்கூடிய அளவுக்கு, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது விசாரணை நடத்தப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு