உலக செய்திகள்

ஈரான்: அணு சக்தி திட்டங்களை தொடருவோம்

தடை செய்யப்பட்ட தனது அணுசக்தி திட்டங்களை தொடரப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஐநா சபை (அமெரிக்கா)

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆறு நாடுகள் ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகினால் தடை செய்யப்பட்ட தனது அணுசக்தி திட்டங்களை தொடரப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள், ஒபாமாவின் அமெரிக்கா உட்பட ஈரான் தனது அணுசக்தி-அணு ஆயுத திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று உடன்படிக்கை செய்து கொண்டன. இப்போது அதிபர் டிரம்ப் இந்த உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாக கூறி வருகிறார். இதையடுத்து ஈரான் அப்படி அமெரிக்கா விலகினால் உடனடியாக தனது அணுசக்தி ஆய்வு திட்டங்களை துவங்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.

இத்தகவலை ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?