உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் இருக்கக் கூடாது: ஈரான் அதிபர்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

தினத்தந்தி

இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர்பாக, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற 5 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. மேலும் இது தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

இந்த சூழலில் ஈரான் அதிபர் தேர்தலையொட்டி அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்டு மாதம் பதவியேற்ற பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் எனவும் ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இல்லாமல் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நிச்சயமாக எங்கள் அரசாங்கத்திற்கு மையமாக இருக்கும் என்று நான் முன்பே கூறினேன். அதன்படி அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு கவனம் செலுத்தும். ஆனால் அதில் ஈரானுக்கு எதிரான புதிய தடைகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் இருக்கக் கூடாது. அவர்களின் (மேற்கத்திய நாடுகள்) வற்புறுத்தலின் கீழ் தொடர்ந்தால் இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறாது என கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை