டெஹ்ரான்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 11-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,623 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47,56,394 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 709 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 03 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 39 லட்சத்து 93 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 6,59,826 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஈரானில் தற்போது பரவி வரும் டெல்டா வகையின் கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காத காரணத்தால் ஜூன் இறுதியில் இருந்து சமீபத்திய தொற்று விகிதங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.