உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 611 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

தெஹ்ரான்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த கொரோனா வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 611 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 97 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலியானவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 12,729 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரசால் பாதிப்புக்கு பலியான நிலையில், பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?