உலக செய்திகள்

அணு ஆயுத ஒப்பந்தத்தின் உத்வேகத்தை ஈரான் மீறுகிறது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

அணு ஆயுத ஒப்பந்தத்தின் உத்வேகத்தை ஈரான் மீறுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டினார்.

வாஷிங்டன்,

கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா அணுஆயுதம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதையடுத்து, அணு திட்டம், அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவிடம், ஈரான் சரணடைந்தது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்சனையில் சுமூகமாக தீர்வு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை நான் அங்கீகரிக்க போவது இல்லை. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது அமெரிக்க வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம். அது இன்றுடன் முடிந்துவிட்டது.

அணு ஆயுத ஒப்பந்தத்தின் உத்வேகத்தை ஈரான் மீறி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் எங்கள் கூட்டாளிகளுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், இந்த ஒப்பந்தம் முறிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, நீடித்திருக்கவேண்டுமா அல்லது விலகவேண்டுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவை முடிவு செய்வதற்கு இன்னும் 6 மாதம் கால அவகாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு