உலக செய்திகள்

‘‘ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் கிடைக்காது’’: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முனைப்பு

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தா. அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் டிரம்புக்கு பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடனான பிரச்சினைகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு இல்லை

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றினால் அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் கூறிவருகிறார்.ஆனால் அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுடன்

மோதல் போக்கை கடைப்பிடித்து இஸ்ரேல், அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்புவதற்கு பதிலாக ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.இதனிடையே ஈரானில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவர் எதற்காகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என திட்டவட்டமாக கூறினார்.

வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அதிபர்

இது அணுசக்தி ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜோ பைடன் முயற்சிக்கு பின்னடைவை தரும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில் விரைவில் தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டின் அதிபர் ரூவன் ரிவ்லின், அதிபராக தனது கடைசி வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார்.அங்கு அவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது

இந்த பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினிடம் அணு ஆயுத ஈரானை தான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன் என கூறினார். மேலும் தான் அதிகாரத்தில் இருக்கும் போது ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் கிடைக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலுக்கு பிறகு, ஈரானுக்கு எதிரான இந்த கருத்தை ஜோ பைடன் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ஈரான் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்