உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் பெருமையுடன் புறக்கணித்துச்செல்லும்: அதிபர் ரவுகானி

அமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் பெருமையுடன் புறக்கணித்துச்செல்லும் என்று அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தெஹ்ரான்,

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது. இன்று (நவ.5) முதல் இந்த பொருளாதார தடை அமலுக்கு வந்துள்ளது. ஈரானின் எண்ணைய் மற்றும் நிதித்துறையை கடுமையாக பாதிக்கும் தடையாக இந்த பொருளாதார தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து, ஈரான் அதிபர் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது, ரவுகானி கூறுகையில், உங்களின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதார தடைகளை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்துச்செல்வோம். ஏனெனில், சர்வதேச விதிகளுக்கு எதிரானது உங்களின் பொருளாதார தடை என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை