Photo Credit: AFP 
உலக செய்திகள்

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருக்கிறாரா? வீடியோ வெளியாகி பரபரப்பு

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டு வந்த அய்மான் அல் ஜவாஹிரி கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காபூலில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி வந்தது.

இந்த தகவலை அமெரிக்க ஜோ பைடன் கூட உறுதிப்படுத்தியிருந்தார். அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டு கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திடீரென அல் ஜவாஹிரி இடம் பெற்றிருக்கும் வீடியோ ஒன்றை அல்கொய்தா அமைப்பு வெளியிட்டது. எனினும், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்