உலக செய்திகள்

குவெட்டா குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் குவெட்டா குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பு ஏற்று உள்ளது. #QuettaAttack #IS

தினத்தந்தி

குவெட்டா,

பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று அந்நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 4 லட்சத்து 49 ஆயிரத்து 465 போலீசாரும் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தமீர் இ நவ் கல்வி பள்ளிக்கூட காம்ளெக்சில் உள்ள வாக்கு சாவடிக்கு வெளியே இன்று தற்கொலை படை தாக்குதல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்டவர்கள் பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டதுள்ளது. இதனை AMAQ செய்தி எஜென்சி தெரிவித்து உள்ளது.

தேர்தலுக்கு முன் பிரசாரம் மற்றும் பேரணியின்பொழுது முக்கிய தலைவர்களை இலக்காக கொண்டு நடந்த தாக்குதல்களில் 180 பேர் வரை பலியாகி இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்