உலக செய்திகள்

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார்.

தினத்தந்தி

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. கப்பல்களையும் அனுப்பி வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிளிங்கனுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழித்தது போன்று ஹமாஸ் அமைப்பும் விரைவில் வீழ்த்தப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நடத்தியது போன்றே ஹமாஸ் அமைப்பையும் நடத்த வேண்டும்.

நாடுகளின் சமூகத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்களை எந்த தலைவரும் சந்திக்க கூடாது. எந்த நாடும் அவர்களுக்கு புகலிடம் அளிக்க கூடாது. அப்படி புகலிடம் அளிப்பவர்கள் மீது தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளார்.

ஹமாஸ் ஒரு தெளிவான தீங்கு ஏற்படுத்தும் அமைப்பு என அதிபர் பைடன் கூறிய விசயங்களை மீண்டும் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்