உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் குர்ஷித் டி.வி. நிலைய ஊழியர்களை சுமந்து கொண்டு நேற்று முன்தினம் ஒரு பஸ் சென்றது. அப்போது சாலையோரத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் பஸ் சிக்கிக்கொண்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். இந்த குண்டுவெடிப்பால் பஸ் பெருத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்வதவர்களில் 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். இது குறித்து அந்த அமைப்பின் இணையதளத்தில், குர்ஷித் டி.வி.யின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் துரோக அரசின் நம்பிக்கைக்கு உரிய டி.வி. இது என கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு