Image Courtesy : ANI 
உலக செய்திகள்

இலங்கையின் வான்வெளியை வாங்குகிறதா இந்தியா? பரபரப்பு தகவல்

இலங்கையின் வான்வெளி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவுள்ளதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான்பரப்பையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கை எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இலங்கையின் கடல்சார் மீட்புப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்க 60 லட்சம் டாலர் அளிக்க இந்திய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தியா கண்காணிப்பு விமானத்தை வழங்குகின்றது.

இதன் மூலம் இலங்கையின் வான்வெளி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என அந்த நாட்டின் எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு இலங்கை அரசு "நாட்டின் வளங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை " என மறுப்பு தெரிவித்துள்ளது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு