உலக செய்திகள்

டிரம்புக்கு ஆபத்தா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக குறிவைத்து தாக்குகிறது. இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு 74 வயதாகிறது.

தினத்தந்தி

கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக குறிவைத்து தாக்குகிறது. இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு 74 வயதாகிறது.

இந்த நிலையில் அவரை கொரோனா தாக்கி இருப்பது குறித்து கனெக்டிகட் பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் பனச் கூறுகையில், 74 வயதில் டிரம்புக்கு முதலில் அவரது வயதுதான் முதன்மையான ஆபத்து காரணியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பிற மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, டிரம்ப் உடல் பருமனாக இருக்கிறார். பி.எம்.ஐ. என அழைக்கப்படுகிற அவரது உடல் நிறை குறியீட்டு எண் 30-ஐ தாண்டி இருக்கிறது. உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் வெளிப்பாடுதான்.

கொழுப்பு கூடுதலாக இருக்கிறது. இதை குறைக்க மருந்து எடுத்துக்கொள்கிறார். இந்த நிலை, கொரோனா வைரஸ் தொற்று சிக்கல்களுக்கான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டனர். ஆண் என்பதுவும் கூட கொரோனாவுக்கு எதிரியாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்