உலக செய்திகள்

ஐ.எஸ் இயக்க தலைவர் பாக்தாதி மரணமடைந்தது உறுதி ஈரானிய ஊடகம் சொல்கிறது

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டதாக ஈரானின் அரசாங்க செய்தி நிறுவனம் ஒன்று கூறி உள்ளது.

தினத்தந்தி

சிரியா அரசு தொலைக்காட்சி தான் இத்த கவலை வெளியிட்டுள்ளது. எனினும், ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் பாக்தாதி தலைமறைவாக இருந்துவிட்டு சிரியாவில் உள்ள ராக்கா நகருக்கு புகுந்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். பாக்தாதியை உயிருடன் அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிரியா தொலைக்காட்சி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் பாக்தாதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. எனினும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஊடகம் இத்தகவல் குறித்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. பாக்தாதி உயிரிழந்து விட்டதாக கடந்த சில மாதங்களாக பல வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி கொல்லபட்டு இருக்கலாம் என கூறி உள்ளது. ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்த தகவலில் மே மாத இறுதியில் ரஷ்ய தாக்குதலில் மற்ற மூத்த குழு தளபதிகளுடன் சேர்ந்து அபு பக்ர் அல் பாக்தாதியும் கெல்லப்பட்டார் என தெரிவித்து இருந்தது.

ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாதி "நிச்சயமாக இறந்துவிட்டதாக" ஈரானிய தலைமைத் தலைவர் அயத்ல்லா அலி காமெனியின் பிரதிநிதி ஒருவர் கூறியதாக ஈரானின் அரசாங்க செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

பாக்தாதி நிச்சயமாக இறந்து விட்டார், என மதகுரு அலி ஷிராஸி, பிரதிநிதி கூற்றை மேற்கேள் காட்டி ஐ.ஆர்.என் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.ஆனால் ஈராக் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பாக்தாதின் மரணம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்