இந்த அமைப்பினை அமெரிக்க அரசு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என பட்டியலிட்டுள்ளது. ஹேபிலனை கைது செய்வதற்காக அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்சின் மராவி நகரில் ஐ.எஸ். அமைப்பின் தளத்தினை நிறுவுவதற்காக அப்பகுதியில் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு போரிட்டு வந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 4 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
இதுபற்றி பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் டெல்பின் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் படைகள் ஹேபிலன் மற்றும் உமர் மாட்டி ஆகிய 2 பேரை சுட்டு கொன்றுள்ளது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் பரிசு தொகை அறிவித்துள்ள நிலையில் அவர்களது உடல்களில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.