ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் இயக்கம் தங்களது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடியான சூழலில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமாக தனியிடம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தனியாக ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அமெரிக்க மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் நோக்கி குடிபெயர்ந்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் வீழ்ச்சியால் பயங்கரவாதம் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது. இந்த வாய்ப்பை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் குடிபெயர திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.