உலக செய்திகள்

லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல்?

லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

டெல் அவிட் 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி  வருகிறது. இதற்கு பதிலடியாக  லெபனான் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல்  மீது கோபம் அடைந்துள்ளது. இதனால், இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் முக்கிய திருப்பமாக லெபனானுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ள இஸேல் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், லெபானிடம் இருந்து முறையான அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை