கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: மூன்று நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் அரசு ஒமைக்ரான் பரவல் காரணமாக மூன்று நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

இஸ்ரேல்,

உலகம் கொரோனாவை விட்டு மீண்டு வருவதற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரசானது தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் ஒமைக்ரானிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இஸ்ரேல் அரசானது கொரோனா வைரசை தடுக்க வெளிநாட்டினர் வருவதற்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து திரும்பும் இஸ்ரேலியர்களுக்கு 3-7 நாள் சுய தனிமை உத்தரவுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன், டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலியர்கள் செல்லக்கூடாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த புதிய பயணக் கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று மூத்த இஸ்ரேலிய சுகாதார அதிகாரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை