Image Courtesy: AFP 
உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா - இந்திய பயணத்தில் சிக்கல்

இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் அரசு முறை பயணமாக வரும் 3-ம் தேதி இந்தியா வர உள்ளார். 3-ம் தேதி இந்தியா வரும் பென்னெட் இந்திய பிரதமர் மோடி உள்பட் முக்கிய தலைவர்களை சந்தித்து பின் 5-ம் தேதி இஸ்ரேல் திரும்புகிறார்.

இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்ற பின் நப்தலி பென்னெட் இந்தியாவுக்கு வர உள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் வீட்டில் இருந்தவாறு பிரதமர் பென்னெட் தனது பணிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நப்தலில் பென்னெட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வரும் 3-ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தால் திட்டமிட்டபடி 3-ம் தேதி பென்னெட் இந்தியாவுக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.