Photo Credit:AI 
உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

ஈரான் - இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் தெஹரானில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், இஸ்ரேலில் வான்வழி மூடப்பட்டுள்ளது. மக்களை உஷார்படுத்த சைரனும் ஒலிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேறும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.