சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் யூசர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், விரைவில் வாட்ஸ் அப்பில் டிபி பிக்சரில் புதிய அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வாட்ஸ் அப் டிபி வைக்காவிட்டால் பயனர்களின் பெயரின் முதல் எழுத்தோடு சேர்த்து வெவ்வெறு வண்ணங்களில் டிபி காட்ட்டும். ஒரே பெயரில் பலர் இருந்தால் இது வாட்ஸ் அப் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதை பார்க்க முடியும். இந்த நிலையில்தான் வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை டெஸ்ட்டில் வைத்துள்ளதாம்.
அதாவது போனில் தொடர்பு (Contact)களுக்கு போட்டோ வைத்து இருந்தால் அந்த போட்டோவை வாட்ஸ் அப் டிபி லிஸ்டிலும் காட்டும் வகையில் அப்டேட் வர இருக்கிறதாம். வா பீட்டா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பயனர்களின் தனியுரிமையை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது. வாட்ஸ் அப் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.