இத்தாலி துறைமுகத்தில் ரூ.8,250 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்; ‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்காக தயாரிக்கப்பட்டவை’
இத்தாலி துறைமுகத்தில் ரூ.8,250 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினத்தந்தி
ரோம்,
இத்தாலி நாட்டில் உள்ள சலேர்னோ துறைமுகத்தில் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 டன் ஆம்படமைன் போதை மாத்திரைகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.