உலக செய்திகள்

இந்த கிராமத்திற்கு சென்றால் ரூ.25 லட்சம் கிடைக்கும்..ஆனால் ஒரு நிபந்தனை..!

கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியுடன் போராடி வருகிறது.

தினத்தந்தி

ரோம்,

இத்தாலியின் "கால்விரல்" என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியுடன் போராடி வருகிறது. இது உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கலாப்ரியா நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு ( ரூ.25 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுக்குள் இருக்க வேண்டும், கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும். 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்