உலக செய்திகள்

குளிர் கால ஒலிம்பிக் போட்டி: நிறைவு விழாவில் இவாங்கா டிரம்ப் பங்கேற்பு

குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் பங்கேற்க உள்ளார். #Olympics #IvankaTrump

நியூயார்க்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. குளிர் கால ஒலிம்பிக் போட்டி தொடரில் வடகொரியாவும் கலந்து கொண்டது. குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், வடகொரியா அதிபரின் சகோதரி ஜிம் யோ ஜோங் கலந்து கொண்டார். ஏறக்குறைய இரண்டு வார காலம் நடைபெற்ற இந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் இந்த வார இறுதியில் முடிவு பெறுகின்றன.

குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், உயரதிகாரிகளுடன் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து இவாங்கா டிரம்ப் கூறியதாவது:

பியோங்சாங்கில் நடைபெற்று வரும் 2018-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தலைமை ஏற்று கலந்து கொள்கிறேன். ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்பது பெருமையாக கருதுகிறேன். அமெரிக்க விளையாட்டு வீரர்களை வாழ்த்துவதற்கும், அவர்களது சாதனைகளை கொண்டாடுவதற்கும் நான் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு