ஸ்டாக்ஹோம்,
கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது
வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம். மருத்துவ துறைக்கே நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
ஜெர்மனியை சேர்ந்த ரைனர் வெயிஸ், அமெரிக்காவை சேர்ந்த பரிசி பேரிஸ் மற்றும் கிப் எஸ் தோர்ன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்கள் லிகொ என்ற கருவி மூலம் புவிஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆல்ர்பர் ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஈர்ப்பு அலைகள் இருப்பதை 3 விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர்.
இந்த நிலையில், 2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த ஜேக்கஸ் டெபோசே, ஜோசிம் பிராங்க் மற்றும் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு அளிக்கப்படும். பரிசு தொகை ரூ.7 கோடி 3 பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழு தலைவர் கோரன் ஹான்சன் இதனை அறிவித்துள்ளார்.