இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த இடங்களில் அதிகமாக 110 இடங்களில் இம்ரான் கட்சி வெற்றி பெற்று உள்ளது ஆனால் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பி.எம்.எல்என்), 63 இடங்களே பெற்று உள்ளது.
பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்தை வெளியிட்டு உள்ள, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் மந்திரி நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் "திருடப்பட்டவை" என்றும், "கறைபடிந்த மற்றும் சந்தேகத்திற்குரிய முடிவுகள் நாட்டின் அரசியல் மீது" மோசமான தாக்கத்தை "ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்து உள்ளார்.
பைசலாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி, பகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் மிக உறுதியான நிலையில் இருந்தனர், ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர் என கூறினார்.