Image Courtesy : @DrSJaishankar 
உலக செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு - இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு

அண்டோனியோ குட்டரெஸை இந்தியாவில் வரவேற்க ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாக எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் அவரை வரவேற்க ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றும் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.  

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?