உலக செய்திகள்

ஜப்பான்: பள்ளியில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதி

ஜப்பானில் பள்ளி கூடத்தில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் யமனாஷி மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி வெளியான செய்தியில், கைகளை கழுவ வைத்திருக்கும் சேனிடைசரை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதனை தடகள வீராங்கனைகள் குடிநீர் அருந்த கூடிய பகுதிகளில் தவறுதலாக போட்டி நடத்துபவர்கள் வைத்து விட்டனர்.

ஆனால், இதனை அறியாமல் அந்த நீரை எடுத்து குடித்த ஒரு மாணவி வாந்தி, எடுத்து போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதேபோன்று அந்த நீரை, தெரியாமல் எடுத்து குடித்த மற்ற 2 மாணவிகள் உடனடியாக அதனை வெளியே துப்பி விட்டனர். பின்னர் போட்டியிலும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து யமனாஷி கவர்னர் கொடாரோ நாகசாகி கூறும்போது, இதுபற்றிய முறையான விசாரணைக்கு நடத்தப்பட்டு உள்ளது. நடந்த சம்பவத்திற்காக தடகள வீராங்கனை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து