உலக செய்திகள்

ஜப்பான்: ரயில்வே பணிகளில் களமிறங்கிய மனித வகை ரோபோ

ஜப்பானில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ, 40 கிலோ எடையுள்ள பொருட்களை 10 மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது. ரயில் இயக்கத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை இந்த ரோபோ சுலபமாக சரிசெய்வதால், மனிதர்களின் ஆபத்தான பணிக்கு இந்த ரோபோ உதவிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனிதர்களின் உழைப்பை மூன்றில் ஒரு பங்காக இந்த ரோபோ குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை முறையில் மட்டும் மனித ரோபோ பயன்படுத்தப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு முழு வீச்சில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து