உலக செய்திகள்

ஜப்பானில் நிலச்சரிவு : 19 பேர் மாயம்; 35,500 பேர் வெளியேற்றம்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள அட்டாமி வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நகரமாகும். அட்டாமி என்ற பெயருக்கு சூடான கடல் என அர்த்தம்

தினத்தந்தி

டோக்கியோ

ஜப்பானில் பெய்த கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 35,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.இந்த வார தொடக்கத்தில் இருந்து ஜப்பான் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் நாட்டின் மத்திய பகுதியிலும் டோக்கியோவிலும் ஆறுகள் பெருகி நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள அட்டாமி வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நகரமாகும். அட்டாமி என்ற பெயருக்கு சூடான கடல் என அர்த்தம்

கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் ஏற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு