உலக செய்திகள்

வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி

ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ படைகள் மிகப்பெரிய அளவிலான கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.

தினத்தந்தி

டோக்கியோ,

வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பானின் தெற்கு பகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் படைகள் நேற்று மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இந்த கூட்டுப் பயிற்சி வரும் 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போர் பயிற்சிக்கு 'கூர்மையான வாள்'(Keen Sword) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 26 ஆயிரம் ஜப்பான் வீரர்களும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வீரர்களும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்