ஜப்பான் நாட்டில் வேலை நேரம்குறித்து அதிக கட்டுப்பாடுகள் உள்ளன.வேலை நேரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
வாட்டர் ஒர்க்ஸ் பீரே எனும் நிறுவனத்தில் பணியாற்றும் 64 வயதானவர் மதிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடங்கள் முன்னதாக சென்றதால் அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் 12 மணி முதல் 1 மணி வரை மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும். ஆனால் அவர் 11.57 மணிக்கு சென்றுள்ளார். இதேபோல 7 மாதங்களில் 26 முறை அவர் முன்னதாக சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு தண்டனையாக அவருக்கு ஒருநாளுக்கு அரை நாள் சம்பளம் வீதம் பிடித்தம் செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.