உலக செய்திகள்

அன்னையர் தினத்தன்று புலம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்களை சந்திக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி முடிவு!

புலம்பெயர்ந்த உக்ரேனிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜில் பைடன் சந்திக்கிறார்.

வாஷிங்டன்,

அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு மே 5-9 வரை சென்று அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களை சந்திக்க உள்ளார்.

மேலும், இடம்பெயர்ந்த உக்ரேனிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜில் பைடன் சந்திக்கிறார்.

ஐ.நா. வெளியிட்ட தகவல் படி, ஏப்ரல் 27-ம் தேதிக்குள், உக்ரைனிலிருந்து அகதிகளாக கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் போலந்துக்கு தப்பிச் சென்றனர், ருமேனியாவுக்கு சுமார் 8,17,300 பேரும், ஸ்லோவாக்கியாவுக்கு 3,72,000 பேரும் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா. தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 8ம் தேதி அன்று அமெரிக்காவில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட உக்ரேனிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் சந்திக்க உள்ளார்.

அவரது வருகை உக்ரைனுக்கான ஆதரவைக் காட்டுகிறது. அவரது வருகை உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளால் உதவி செய்யும் அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சியாக அமையும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, மார்ச் மாதத்தில் ஜில் பிடன் மற்றும் அவரது போலந்து இணை, அகடா கோர்ன்ஹவுசர்-டுடா ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். ரஷியாவின் படையெடுப்பால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியில், முன்களத்தில் நின்று மருத்துவ சேவைகள் மற்றும் உதவிகளை விரைவுபடுத்த ஜில்பைடனும் அகடாவும் இணைந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு