கோப்புப் படம் 
உலக செய்திகள்

பெல்ஜியத்தில் இன்று நேட்டோ அவசர உச்சி மாநாடு..!

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு நடக்கிறது.

தினத்தந்தி

பிரஸ்ஸல்ஸ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை எட்டிய நிலையில், நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும், அவர் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் தனது கூட்டாளிகளுடன் ஜோ பைடன் விவாதிக்க உள்ளார்.

பின்னர், போலந்து செல்கிற ஜோ பைடன், அங்குள்ள அமெரிக்க படையினரை சந்தித்து பேசுவார்.

இந்த தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்