Image Courtesy : AFP 
உலக செய்திகள்

முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவியை துணை அதிபர் என குறிப்பிட்ட ஜோ பைடன்- வைரலாகும் வீடியோ

ஒபாமாவின் மனைவியை அமெரிக்காவின் துணை அதிபர் என ஜோ பைடன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று இருந்தார். அப்போது `உரையாற்றிய அவர் தவறுதலாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை துணை அதிபர் என்று குறிப்பிட்டார்.

ஜோ பைடன் அவரது மனைவி மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடனின் பணிக்காக நன்றி தெரிவிக்க விரும்பும்போது மிச்செல் ஒபாமாவை குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடன் இன்று பேசுகையில் "அமெரிக்காவின் முதல் பெண்மணியாக மிச்செல் ஒபாமா ஆற்றி வரும் பணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணி என அவர் துணை அதிபர் பதவியை குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசும் இந்த வீடியோவானது தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை