கோப்புப்படம் 
உலக செய்திகள்

கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்

கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ஜனாதிபதி ஜோ பைடன் ரத்து செய்தார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அந்த நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குடியேற்றமற்ற எச்1பி விசாக்கள், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான சில வகை வேலை விசாக்களை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ரத்து செய்தார். டிரம்பின் பல சட்டங்களை தொடர்ந்து ரத்து செய்து வரும் ஜோ பைடன், சமீபத்தில் எச்1பி விசா நடைமுறையில் பழைய லாட்டரி முறையே தொடரும் என்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது கிரீன் கார்டு தடையையும் நீக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து டிரம்ப் அரசு விதித்திருந்த தடைக்கான காரணத்தை ஏற்க முடியாது என்றும், இந்தத் தடையால் பல கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த ரத்து அறிவிப்பு இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து