உலக செய்திகள்

ஜோ பைடன் தலைமையில் குவாட் தலைவர்கள் மாநாடு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், குவாட் தலைவர்களின் நேரடி பங்கேற்பில் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

குவாட் மாநாட்டில் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்