உலக செய்திகள்

2-வது முறையாக இந்தோனேசிய அதிபராக ஜோகோ விடோடோ பதிவியேற்பு

2-வது முறையாக இந்தோனேசிய அதிபராக ஜோகோ விடோடோ பதிவியேற்றுக் கொண்டார்.

தினத்தந்தி



* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் பிரேக் பிடிக்காத காரணத்தால் சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* இந்தோனேசியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தொடர்ந்து 2-வது முறையாக இந்தோனேசிய அதிபராக நேற்று பொறுப்பு ஏற்றார்.

* தெற்கு சூடான் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்ததால் தலைநகர் புஞ்ச் உள்பட பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் உள்ள யட்டாங்கா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவவீரர்கள் மற்றும் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

* சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு