உலக செய்திகள்

கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் : டிரம்ப் விமர்சனம்

கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்பேது, கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர் என்றும், என் மகள் இவாங்கா டிரம்ப் தான் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு