உலக செய்திகள்

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது - கசகஸ்தான் வெளியுறவு மந்திரி

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கசகஸ்தான் வெளியுறவு மந்திரி கூறினார்.

அஸ்டானா(கசகஸ்தான்),

ரஷியா - உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், கசகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி ரோமன் வாசிலென்கோ, ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கூறினார். கசகஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் அவர் பாராட்டினார்.

அவர் கூறியதாவது, "இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சர்வதேச மன்றங்களில் இந்தியா தனது கருத்துக்களை முன்வைக்கும் போது ரஷியா-உக்ரைன் மோதல்களில் மிகவும் சமநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையான ஒன்றாக உள்ளது.

இருதரப்பு உறவுகள் குறித்து, கஜகஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட மற்றும் வரலாற்று உறவு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், எங்கள் உறவில் மிகவும் சுவாரஸ்யமான வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம். இந்திய கலாச்சாரம் தொடர்பாக கஜகஸ்தானில் பல பாராட்டத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவும் கசகஸ்தானும், இருதரப்பு உறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும், கசகஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை மாறாது என்றும், பலதரப்பு தளக் கொள்கையை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...