நைரோபி,
கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ளது மசகோஸ் மாகாணம். இங்கு அமைந்துள்ள மாட்டூ பகுதியில் காரிஸ்சா- திகா நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் மோசமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது.
தலைநகர் நைரோபிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 15 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.