கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

மாஸ்கோ,

3 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உக்ரைனின் டோனெட்ஸ்க் நகரை குறிவைத்து ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பீரங்கிகள், கவச வாகனங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கொண்டு ரஷிய ராணுவத்தினர் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவினர். நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவத்தினர் சமாளிக்க முயற்சித்து தோல்வியை தழுவினர்.

இதனால் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒர்லிவ்கா கிராமத்தை உக்ரைன் ராணுவம் ரஷியாவிடம் பறிகொடுத்தது. மேலும் இந்த தாக்குதலில் 215 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், 3 கவச வாகனங்களை உக்ரைன் இழந்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 234 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்